தழையதழைய
சேலைஉடுத்தி
வழியவழிய
நாணம்சுமந்து
இழையஇழைய
புன்னகைத்து
விழையவிழைய
மொழிநவின்று
குழையகுழைய
நடைபயின்று
பெண்கள் இருந்ததெல்லாம்
ஒருகாலம்!
இன்றோ
அழகைப் பிழியபிழியக் காட்டும் நவீன ஆடைகள்!
நாணத்தைக் கழித்த
முகங்கள்!
கலாச்சாரத்தைக் கிழிக்கும் செயல்கள்!
ஆனாலும் ஓர்ஆறுதல்!
தமிழரின் கலாச்சாரம் கிளைகள் மழிக்கப்பட்டாலும்
ஆணிவேர் அப்படியே
பழமை மாறாமல்
இன்னமும் தழைத்திருக்கு!
*த.ஹேமாவதி*
*கோளூர்*