உடன்பிறந்தவர்
உடன்பிறவாதவர்
உறவினர்
உறவினரல்லாதவர்
உடன்பணிபுரிபவர்
பக்கத்து வீட்டுக்காரர்
தினமும் நம்முடன் பயணிப்பவர்
பொதுஇடங்களில் நம்மைக் கடப்பவர் மற்றும் நம்மால் சந்திக்கப்படுபவர்
என யாராயிருந்தாலும்
அவர்களுள்
நம்மைவிட வயதில்
மூத்தோராய் இருந்தால் அவர்களிடம் பழகும்
விதத்தில் கவனம் தேவை!
மூத்தோரை மரியாதை செய் இதைநீ மறவாதே! கனிந்த பார்வையால் பார்க்கவேண்டும்!
இனியமொழியால்
பேசவேண்டும்!
நிமிர்த்தலும் முறைத்தலும் பரிகாசித்தலும் துளியேனும் பார்வையில் கலக்கக்கூடாது!
மூத்தோர் முகங்கண்டால்
தாமரையாய்
உன்முகம் மலரவேண்டும்!
அதில் புன்னகைவாசம்
மணக்கவேண்டும்!
நெருடலோ விகற்பமோ இல்லாமல் இலேசான மனத்தோடு விருப்போடு பேசவேண்டும்!
மூத்தோரைப் பழித்தலும் அவமதித்தலும் ஒதுக்கியே வைத்தலும் கூடாது! போலியாகப் பேசுதலும் ஒருபோதும் வேண்டாமே!
மனங்குளிரப் பேசு!
இயன்றவரை உதவு!
அன்னாரின் நற்செயலுக்கு நன்றிதனைக் காட்டு!
பழம்நழுவிப் பாலில்விழுந்தது போல
மூத்தோரின் மனந்தனிலே
முழுதாய் இடம்பிடித்து சந்தோஷக் கடலிலே ஆனந்தமாய் நீந்தலாம்!
த.ஹேமாவதி
கோளூர்