நான் செய்யாத தவறுக்காக
பலரிடம் பேச்சு வாங்கிய போது மௌனமாய் நின்றிருந்தேன்
எனக்கு பிரியமானவர்களை காப்பாற்ற
மக்களை ஏய்த்துப் பிழைப்பவர்களை
தட்டி கேட்க முடியாமல்
மௌமாய் நின்றிருந்தேன்
கையில் அதிகாரம் இல்லை என்பதால்
ஒழுக்கம் தவறிப் போகும் மாணவர்களை
கண்டிக்க முடியாமல் மௌனனமாய் நின்றிருந்தேன்
எங்கள் கரங்கள் கட்டி இருப்பதால்
நமது நாகரீகத்தை தொலைக்கும் மக்களை
தட்டி கேட்க முடியாமல் மௌனமாய் நின்றிருந்தேன்
அது அவர்கள் சுதந்திரம் ஆனதால்
தமிழை தவறாய் எழுதும் மக்களை
அறைய முடியாமல் மௌனமாய் நின்றிருந்தேன்
அது அவர்கள் உரிமை என்பதால்
மெத்தப் படித்தோரும்
மூடனிடம் மண்டியிடும் நிலைமை கண்டு
மௌனமாய் நின்றிருந்தேன்
அவர்கள் பதவியில் இருப்பதால்
பதர்களையும் புதர்களையும் உயர்த்தி வைக்கும்
செயல் கண்டு மௌனமாயிருந்தேன்
அவர்கள் அறியாமையிலிருப்பதால்
மௌனம் எப்போதும் சம்மதமில்லை
அது சாத்தியமுமில்லை
மௌனம் களைவோம்
உலகை காப்போம்
தி.பத்மாசினி