காஞ்சி தந்த காவியமே!
ஓய்வறியா
சூரியனே!
ஓர்இரவு என்றாலும்
நிலைத்த இரவாய்
நெஞ்சில் தங்கிவிட்டது!
அன்று நீங்கள் நட்ட செவ்வாழை இதோ இன்றும் குலையீன்று எங்களைச் சுவைக்க வைக்கிறது!
ரங்கோன் ராதாவை
அழியாத ராதாவாய்
இதயத்தில் வைத்துவிட்டீர்!
பார்வதி பி.ஏ என்று
பெண்கல்விக்கு வித்திட்டீர்கள்!
கடமை கண்ணியம் கட்டுபாடு என்ற மூன்றையும் பட்டித்தொட்டி எங்கும் அறியவைத்தீர்கள்!
ஆங்கிலேயனும் அண்ணாந்து வியக்குமளவு ஆங்கிலப் பேச்சாற்றலிலே வல்லமை காட்டினீர்கள்!
தம்பீ! என அழைத்துப் பாசத்தைக் கொட்டி
கண்ணான அண்ணாவாய்த் திகழ்ந்தீர்கள்!,
மாற்றான்வீட்டு மல்லிகைக்கும் மணமுண்டென்று
சொல்லி நம்வீட்டுத் தோட்டத்தின் மணம்மிகுந்த மல்லிகைப்பூவாய் இன்றும் மணக்கிறீர்கள்!
காலத்தை வென்றவரே! காவியமானவரே!
தமிழின் வாசத்திலே கலந்தவரே!வனங்குகிறோம் இந்நாளில் உம்மை!
த.ஹேமாவதி
கோளூர்