தாயென்னும் கடலுக்குள் உருவாகும் சிப்பி
உதித்த பின்
சிப்பிக்குள் கடல் மூழ்கி விடும்
நடிப்பென்னும் சிப்பிக்குள் இருக்கும் நடிகர்கள்
ரசிகரென்னும் கடலில் திக்குமுக்காடி விடுகிறார்கள்
தாய்மையென்னும் சிப்பிக்குள் நுழைய முடியா பெண்கள்
வசைபாடும் கொடுமையென்னும் கடலில் சிக்கித் தவிக்கிறார்கள்
பெற்றோரென்னும் சிப்பிக்குள் பாதுகாப்பாய் இருக்கும் மணமாகா பெண்கள்
சமுதாயமென்னும் கடலில் அலைகழிக்கப்படுகிறார்கள்
கணவன் என்ற சிப்பிக்குள்ளிருந்த பெண்கள்
கைம்பெண்ணான பெண்கள்
சம்பிரதாயம் என்ற கடலில் கொடுமைக்காளாகிறார்கள்
தி.பத்மாசினி