🌹உள்மன ஓசைகள்🌹
உள் மனதின் ஓசைகள்
அவை வங்கக்கடலோசையை
விட வீரியமிக்கவை!
ஆயினும் மௌனத்தை
மொழியாய்க் கொண்டவை?
மெட்டமைக்கும் நேரத்தில்
எட்டுத்திசைக்கும்பறப்பவை!
வரிசையிட்டுக் கூறுவேன்
வந்திங்கு கேட்பீரே!!
ஒட்டுமொத்த வலியதனை
பட்டும் பெற்றபிற்ளையை
சுட்டுவிரலால் கூடத்தீண்டா
து குப்பைத்
தொட்டியதில் வீசும்போதும்,
பிஞ்சினை வாரியணைத்து
கொஞ்சும் செயல் விடுத்து
நஞ்சென பிய்த்து உதறிய
வஞ்சகர் அதனை காணும்
பொழுது ,
தன் சொந்த இரத்தத்தை
இச்சித்து தேகம் தீண்டும்
செத்த மனங்களைக்கடக்கு
ம் போதும்,
போதையேற்றிவருங்காலத்
தை
பேதையாக்கும் வஞ்சகரை
விரட்டவகையற்ற போதும்,
உள்மன ஓசைஆங்காரமாய்!
கல்விக்கூடங்களை
கலவிக் கூடங்களாயும்
சாத்திரம் பேசுமிடங்கள்
சயன மன்றங்களாயும்
கல்வி தரும் தெய்வத்தையும்
மொத்தவிலைக்கே விற்கும்
எத்தருக்கு கல்வித்தந்தைப்
பட்டங்களையும்
காணுந்தோரும் என்
உள்மன ஓசைகள் ஓங்கார
மாய்!!
மழலையின் குரலோயை
மா மரத்துக் குயிலோசையை
அருவி கொட்டும் நீரோசை
யை
மூங்கில் துளைத்தகுழலோ
சையை
வானவில்லின் ஓளியோசை
யை
கத்தும் கடலின் அலையோ
சையை
உண்மைக்காதலர் மனவோ
சையை
உள்வாங்கும் நேரம் என்
உள்மன ஓசை ரீங்காரமாயும்
உருவெடுக்கும் நித்தமும்!!!
🌹🌹வத்சலா🌹🌹