விழிகளைத் தொடும் இமைகள்!
மொழியினைத் தொடும் நாவுகள்!
கடற்கரையைத் தொடும் அலைகள்!
நிலவினைத் தொடும் முகில்கள்!
வண்ணங்களைத் தொடும் தூரிகைகள்
எண்ணங்களைத்
தொடும் கற்பனைகள்
பூக்களைத் தொடும் தேனீக்கள்
இரவினைத் தொடும் மாலை
தென்றல் தொடும்
தேகங்கள்
எல்லாம் இயல்பே!
சிறப்பு எதுவெனில்
நம் மனதைத் தொடும் மனிதர்களே!
மனதைத் தொட்டவர்கள் நம்முயிர் நீங்கும்வரை நம்முடனேயே இருப்பார்கள்!
*த.ஹேமாவதி*
*கோளூர்*