Header Ads Widget

Responsive Advertisement

காத்திரு


உன்னிடம் இருந்த

அனைத்தையும்

இழந்துவிட்டதாய்

எண்ணி திகைத்துப் போனாயோ?

கண்ணைத்திறந்து பார்

பனிக்காலத்தில் 

எல்லா இலைகளும்

உதிர்ந்து போய்

பட்டமரம்போல்

நிற்கும் மரத்தைப்பார்.......!

பொறுமையாய் நின்று

வசந்த காலத்தில்

இரண்டத்தனையாய்

இலைகளைச் சுமந்து 

பெருமைபொங்க

நிற்பதன் காரணம்

நிதானத்துடன் எனும்

அடிவேரின் ஈரத்தை

பற்றிப்பிடித்ததே தான்!!!

எனவே காத்திரு

காலம் உனதாகும் வரை!


🌹🌹வத்சலா🌹🌹