வெற்றிலைக்கொடிகள்
வதங்கிக் கிடந்தன!!!!!
ரோஜாக்கிளை நுனிகளில்
பச்சையம் முற்றிலும்
பஞ்சத்தில் கிடந்தது!!!!
துளசிச்செடிகளில்
சுருங்கிய இலைகளின்
சோக கீதங்கள்!!!
இட்லிப்பூங்கொத்துக்களில்
பட்டினிப்போராட்டம்
பளிச்சிட்டதே!
செம்பருத்திக்குள் வந்ததோ
சோகை நோய் ?
வெளிரியேப் போனதே!!!!
சினத்துடன் நோக்கினேன்
வானத்தை.........
“வருகிறேன் என்று
வாய்நிறையச் சொன்ன
மேகத்தை எங்கேஒளித்தாய்?
தாய்ப்பாலை ஒத்த
மழைநீரைத் தர ஏன்
மறந்தாய்”?
வினவினேன் நான்!
விடை தந்தது வான்!!!
“காற்றின் தாண்டவம்
கரைத்துச் சென்றது!
மேக குவியலை....
கடத்திச் சென்றது!
கையறு நிலையில்
இருந்தேன் நான்”!
மௌனமாய் எடுத்தேன்
பூவாளியை......
வார்த்தேன் நீரை என்
தாவரக்குழந்தைகளுக்கு!!!
மயக்கம் நீங்கி அவை
மலர்ச்சியுடன் கூறின;
“அவகாசம் கொடு புதிய
அவதாரம் எடுப்போம் சீக்கிரம்”
🌹🌹வத்சலா🌹🌹