மூத்தோர் சொல்லும் வார்த்தைகளை
இளையோர் மதிப்பதில்லை
இளையோர் சொல்லும் பேச்சுக்களை
மூத்தோர் கேட்பதில்லை.
கணவன் சொல்லும் சொல்லைக் கூட
மனைவி மதிப்பதில்லை
மனைவி சொல்லும் நல்லதையே
கணவன் கேட்பதில்லை.
இவர்கள் செயலைக் கண்டுவளரும்
குழந்தைகளோ இங்கே
முதியோரை பெற்றோரை
சிறிதும் மதிப்பதில்லை.
ஆள்வோர் செய்யும் செயலெதையும்
எதிர் கட்சி மதிப்பதில்லை
எதிர்கட்சி சொல்லும் கருத்தெதையும்
ஆள்வோர் கேட்பதில்லை.
நல்லோர் சொல்லும் அறமெதையும்
வல்லோர் மதிப்பதில்லை
வல்லோர் கூறும் சொல்லெதையும்
நல்லோர் கேட்பதில்லை.
இதைப் பார்த்து வாழும் பொதுசனமோ
எதையும் மதிப்பதில்லை
மதிப்பு என்ற வார்த்தையிங்கு
அடிமைத்தனம் ஆனது
சமத்துவத்தின் பேரில் இங்கு
மரியாதை போனது.
சொன்னவர்கள் சொன்னதெல்லாம்
சரியாகத்தான் சொன்னார்
கேட்டவர்கள் அதற்கு இங்கு
வேறுபொருள் கொண்டார்.
மதிப்பதனால் தன்மதிப்பை
இழந்து நிற்கிதிங்கே
மரியாதை இல்லாமல்
மதிப்பு அழியுதிங்கே.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*