Header Ads Widget

Responsive Advertisement

எப்போது விழிப்பாய்?


எப்போது விழிப்பாய்
என் இளைஞனே?
களைத்துதூங்கினாயெனில்
கனவுகளும்கூட. கனத்துப்போகும்
இளைத்துத்தூங்கினாயெனி
                                          ல்
இளமையும் பழுத்துப்போகும்
பாதைபோட வந்தார்...... நீ
போதையிலிருந்தாய்😲
நாடு பிடிக்க வந்தார்.........நீ
நடிகனுக்குப்பாலூற்றிக்
               கொண்டிருந்தாய்!!
சாரம் கட்ட வந்தார்......... நீ
சாதிச்சண்டைப் போட்டுத்
                         திரிந்தாய்😲
பூக்கோலத்தில்மிளிர்ந்தவுன்
                    வீதிகள் இனி
புகையிலைக்கறைபட்டுயினி
பல்லிளிக்கும் என்றும்🤔
சம்மதமானால் தூங்கு!
பொய்க்கு மெய்பூசிக்காட்டு
                              வார் முன்
மெய்யையும் பொய்யாகவே
பார்க்கப் பழகிவிட்டாயோ?
காற்றை மாசுபடுத்தினார் !
                                அங்கே
காவலுக்கு நீயே நின்றாய்😢
நிலங்களைக்கொலை
                செய்தார்! அங்கே
நிழல்சாட்சியாய்நீயேநின்றா
                                        ய்!
நீரையும் நஞ்சாக்கினார்!😳
நீசனே துணையாய்போனாய்
ஊரேஉரிமைக்காய்ப்போரா
                            ட நீயோ
ஓட்டுக்கு பேரம் பேசிக்🧰
                 கொண்டிருந்தாய்
கல்விக்கோயில்களை அவர்
              இழுத்துமூடினார்! நீ
கையூட்டு எலும்புக்காய்🐕
                   நாவூறி நின்றாய்!
சாராயச்சிற்றரசுகளின்
                     அரியணைக்கு,,
சாமரம்வீச சடுதியில்சென்
                                   றாய்!
இமயம் வடக்கிருந்து வீசும் குளிர்காற்றை தடுக்கும் !இது
இயற்கைக்கான நேசம்....
                                 ஆனால்
வடக்கு வாழ்வதற்குதெற்கு தேயவேண்டும் எனும் சுயநல
கோட்பாட்டை வாய்பிளந்து
போட்டாயே ஒரு வேஷம்🤔
வந்தாரை வாழவைக்கும்
தமிழகம் சுயமிழந்து போன
                              பின்னர்,,,
நொந்து நீ எங்குபோவாய்?
வங்கக்கடலுக்கா?அதுவும்
வெந்துபோவென உனக்கு
சாபமிடும் நித்தமும்!👊
இனியும் உறங்குவாயெனில்,
சவக்குழியும் உனக்குச்
சொந்தமின்றிப் போகும்😳எழுவாய் என் இளைஞனே!
அழகாய் உனைவாழ்த்த
வானமும் கீழிறங்கி வரும்💐

🌹🌹வத்சலா🌹🌹