இன்னமும்
அவனது
நாட்குறிப்பேட்டின்
தாள்களுக்கு இடையே
குட்டிப் போடுமென்ற நம்பிக்கையில் சிறுவயதில் பத்திரப்படுத்தப் படும் மயிலிறகாய்
அவன் மனதை முதன்முதலாய்க் கொள்ளைக்கொண்டு
சாதியைக் காரணங்காட்டி பெரியோர்களால் பிரித்துவைக்கப் பட்ட காதலியின் உதிர்ந்த தலைமுடி
அப்படியே பத்திரமாய்!
அதை ரகசியமாய் அவன் பார்த்து
விரல்களால் தொடும்போதெல்லாம்
அவனுக்குள் முடிச்சுப் போட்டு வைத்திருக்கும்
அவளது நினைவுகள் யாவும்
முடிச்சவிழ்ந்து
மளமளவென்று மலரும்!கண்ணோரங்களை ஈரப்படுத்தி விடும்!
த.ஹேமாவதி
கோளூர்