Header Ads Widget

Responsive Advertisement

நிலாப் பெண்ணே


நீ என்ன ஆகாய மங்கைக்கு

இளைய மகளோ

எப்போது பார்த்தாலும் ஒளிந்து விளையாட்டு காட்டுகிறாய்

சில நாட்கள் வாராமலே போகிறாய்


நிலாப் பெண்ணே

நீயும் 

நிலப் பெண் போல் தானோ


இன்பமாய் இருந்தால்

குளிர்ச்சியைத் தருகின்றாய்


கோபமாய் இருந்தால் காய்கின்றாய்


தினமும் மாலையில் வருகின்றாய்

காலையில் காணாமல் போகின்றாய்

அப்படி என்ன தான் வேலை பார்க்கின்றாய்

சொல்


நீ என்ன வேலை செய்கின்றாயோ

ஆனால் உன்னை வைத்து இங்கு நிறையவே வேலை நடக்கின்றது


நீ 

 வட்ட. நிலவே

வண்ண நிலவே

அரை நிலவே

பிறை நிலவே


 எங்களுக்கு உன்னைக் கண்டாலே மகிழ்ச்சி பொங்கும்

கவிதைகள் ஊற்றெடுக்கும்

காவியங்கள் பிறப்பெடுக்கும்


தி.பத்மாசினி