எட்டாத தொலைவில் கைக்குக்
கிட்டாத கண்ணாடி!
தங்கத்தை உருக்கிச்
செய்தனரோ என
மயங்கவைக்கும்
வட்டக் கண்ணாடி!
ஆனால் இது
அவரவர் முகங்களைக் காட்டாது!மாறாக
அன்பில் பிணைந்த
ஒருவனும் ஒருத்தியும்
விதியின் வசத்தால்
பிரிந்துப் போனால்
ஒருவர்முகத்தை
மற்றவர்க்குக் காட்டிடும் மாயக்கண்ணாடி!
காதலை வளர்க்கும்
பளிங்குக் கண்ணாடி!
அதுதான் இரவைப் பகலாக்கும் வட்டநிலா என்ற கண்ணாடி!
த.ஹேமாவதி
கோளூர்