Header Ads Widget

Responsive Advertisement

வண்டிடம் விண்ணப்பம்


தலைவியின் கருங்கூந்தலிலே

ஒற்றை ரோசாவைச்

சொருகிய தலைவன் சற்றே

மயங்கினான்

பால்நுரையொத்த

நூல்இடையாள் இவள் ரோசாவின்

பாரத்தைத் தாங்குவாளா?என்றெண்ணிக்

கலங்கிய அவ்வேளை வண்டொன்று ரீங்காரமிட்டுப் பறந்துவந்தது அங்கே!

பதைபதைத்த அவன் வண்டே

வைத்த ரோசாவின் எடைகூட தாங்காத பூமேனி இவள்!

இதில் நீவேறு

தேன்வாசத்தால்

ரோசாவின்மீது அமராதே!பாவம்

உன்னையும் சேர்த்து இவள்

மின்னலிடை தாங்குவதெவ்வாறோ?என்றே கலங்கி விண்ணப்பித்தான்!


த.ஹேமாவதி

கோளூர்