பெண்ணே!
உன்னால் முடியாத
செயலென்று எதுவுமே இல்லை!
நீ நினைத்தால்
சிப்பிக்குள் கடலையே அடக்கிவிடலாம்!
சிப்பியும் நீயும்
ஓரினமே!
முத்துகளை ஈன்று சிப்பிகள் தாயாகும்!
குழந்தைகளை ஈன்று நீ தாயாவாய்!
முத்தில்லா சிப்பியுமுண்டு!
பிள்ளையில்லா பெண்ணுமுண்டு!
மனமென்ற சிப்பிக்குள் பெண்ணே நீ அடக்கி வைத்துள்ளவைகள்
அந்த ஆழ்கடலையும் தோற்கடிக்கும்!
வாழ்வென்ற புறக்கடல் மற்றும்
சிப்பி என்ற மனக்கடல் என இரட்டைக்கடலில்
எதிர்நீச்சல் போடும்
பெண்ணே!
உன்மனக் கடலின் ஆழத்தை ஆரறிவார்?
நீரின்றி துள்ளும் கயல்களாய் கண்கள்!
கடலளவு எண்ணங்களை அடக்கிய மனச்சிப்பி என்னவிந்தையிது!
சிலசமயம் சிப்பி நீ!
சிலசமயம் முத்து நீ!
மற்றொரு சமயம்
கடல்நீ!
மொத்தத்தில்
ஏழுகடலை அடக்கிய சிப்பியாய்
யாராலும் அளவிடமுடியாத பேராற்றல் பெட்டகம் நீ!
*த.ஹேமாவதி*
*கோளூர்*