Header Ads Widget

Responsive Advertisement

தலைக்கனம்


தலை கனத்துப் போனதால்

உடல் இளைத்துப் போனது,

உடல் இளைத்துப் போனதால்

சுமை கனத்துப் போனது,

சுமைகனத்துப் போனதால்

மனம் தளர்ந்து போனது,

மனம் தளர்ந்து போனபின்

மனிதம் உறைந்து போனது.


என் சுமையை நான் சுமக்கும் 

நிலமை வந்து நின்றது,

வன் சுமையாய் என் சுமையே 

எனை அழிக்க முனைந்தது,

அனைத்திற்கும்  காரணம்

தலைக்கனம் எனத் தெரிந்தது,

தலைக்கனத்தைக் குறைப்பது தான் மருந்தென்றும் புரிந்தது.


நான் என்ற பாரத்தைச் சுமப்பவர் எத்தனை? 

நான் என்ற அகந்தையுடன் அலைபவர் எத்தனை?

அவரவர் சுமை தனை அவரவர் சுமப்பதை,

அவரவர் உணர்ந்திடில் 

நலன் பயக்கும் அத்துனை.


*சுலீ அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி*