தந்தையே தாயின் கருவறையில் என்னை
உருவாக்கி
உயிர்கொடுத்த தந்தையே..
எனை பாலூட்டி சீராட்டி
வளர்த்த தாயின் மடியில்
வளர்ந்தாலும்
தந்தையின் விரல்பிடித்து
நடந்து
தோளில்
தொட்டில்கட்டி
துயரங்கள் பல நெஞ்சில்
இருந்தாலும்
என்னை
சுமந்து
படுத்துறங்க
வைத்து பஞ்சு மெத்தையாய்
எனை
சுமந்த தந்தையே..
உன்னை
தாங்கும் சக்தியை ஆண்டவனிடம்
கடன்வாங்க
சென்றேன்..
ஆண்டவன்
என்னை திருப்பியனுப்பினார்
கடவுளாய்
உன்னை சுமந்தவன்
தந்தையை விட
எந்தக்கடவுளும் உயர்ந்தவர்
இல்லை
எதை கேட்க விரும்புகிறாயோ
அதையே
உன்னைப்பெற்ற
தந்தையிடம்
கேள்.. என்றார்
கடவுள்.
கடவுளாய் தந்தை எனக்குக்கிடைத்த
என்னுயிராய்
வந்தவரே
உங்கள்
பிறந்த நாளை
உன் மகனாகிய
எனக்கு
கடவுளின்
பிறப்பை நேரில்
கண்ட நாள்..
கடவுள் நேரில்
இல்லையெனும்
பேச்சு
பொய்
நேரில் காண்கிறேன்
என் தந்தையே கடவுளாய்..
உன்னை வாழ்த்த
எனக்கு வயதில்லையானலும்
உன் பிள்ளையெனும்
உரிமையில்
வாழ்த்துகிறேன்
என்றும்
என்னுடன்
என்
தந்தையாய்...!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..