அங்கும்
இங்கும்
எங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும்
பிழைகள்
பிழைக்கக்கதியற்றுக்கிடக்கும்
மானுடத்தின் நிழலை
விலைபேசும்
பிழைகள்
பிழைசூழ் உலகு
இதில்
நீயென்ன
நானென்ன
யாவும் பிழை
இதைக் கடந்து
இயன்றால் பிழை
இல்லையேல்
நீயும்
நானும்
ஆகப்பெரும்
பிழை
*பொன்.இரவீந்திரன்*