முதன் முதலாய் நாம் கண்டநாள்,
கண்டும் காணாமல் நீ சென்ற நாள்,
உன்னோடு பேச நான் முனைந்த நாள்,
பேச முடியாமல் நான் தவித்த நாள்,
நினைவிருக்கிறதா என் கண்ணே?
ஓரக்கண்ணால் எனைப் பார்த்த நாள்,
பார்த்து நீ முதலில் சிரித்த நாள்,
முதன்முதலாய் கடிதம் நான் கொடுத்த நாள்,
அதைப் பத்திரமாய் நீயும் வைத்த நாள்,
நினைவிருக்கிறதா என் கண்ணே?
கனவு கண்டு நமை நாம் மறந்தநாள்,
கவலையின்றிப் பேசி நாம் மகிழ்ந்த நாள்,
காதலெனும் படகேறிச் சென்ற நாள்,
களைப்பின்றிக் கைகோர்த்து நடந்த நாள்,
நினைவிருக்கிறதா என் கண்ணே?
பிரியமுடியாமல் நாம் பிரிந்த நாள்,
பிரிவின் துயரினிலே உழன்ற நாள்,
மறக்க நினைத்து நாம் தோற்ற நாள்,
மறந்து விட்டதாக நாம் நடித்த நாள்,
நினைவிருக்கிறதா என் கண்ணே?
என்று உள்ளுக்குள் ஒலிக்கிறது
என் உள் மனதின் ஓசை,
வெளியில் தான் வரவில்லை
என் உள் மனதின் ஓசை.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*