ஆயுள் ரேகையில்
அவளுடைய
அன்பை
அச்சாணியாய்ப்
பதிக்கச்சொல்ல
படைத்தப் பிரமனிடம்
படையெடுத்துச்
சென்றேன்..
படைத்தப்
பிரமன் தனக்கும்
அதே
நிலையென்று
தன்னை படைத்தவனிடம்
சென்றாராம்..
அதற்கு
அன்பிற்கினியவள்
அகத்திற்கு
அடைக்கலமானவள்
ஆத்ம
திருப்தியில்
ஆளுமை
உடையவளுக்கு கொண்டவனே
கோயிலாய்
அன்பே தெய்வமாய்
அவதரித்தவள்
நம் வாழ்நாள்
வரை
நம்மோடு
பயணிக்கும்
வாழ்க்கை
சக்கரம்
நம்
மனைவி..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..