பாலிலே மிதக்கும் வெண்ணையும்
இவள்தேகமும் ஒன்றாக இருக்குமோ?
மின்னலாய் மின்னும் இவளது இடையிடம் நூலும்
தோற்றிடும் மெலிவால்!
இப்படியிருக்க இவள் விரும்பிச் சூடிடும் முல்லைமலர்களே
கொஞ்சம் கருணைகாட்டுங்களேன்!
தயவுசெய்து அவள்தலையில் நீங்கள் அமரும்போதெல்லாம்
உங்களின் காம்புகளை மட்டும் காணாமல் செய்துவிடுங்கள்!பாவம் நூலினும் மெல்லிய இடையுடையாள்
காம்புகளின் பாரத்தைத் தாங்கமாட்டாள்!
த.ஹேமாவதி
கோளூர்