வாய்பேசும் அத்தனை மொழிகளுக்கும் தூணாகி
விழிகள்பேசும்
காதலுக்கும் தூணாகி
வாள்முனைகள் மோதும்
வீரத்திற்கும்
தூணாகி
அருவியெனக் கொட்டும் கவிதைகட்கும்
தூணாகி
நாகரிகத்திற்கும்
தூணாகி
அறம் பொருள் இன்பம் என
மூன்றனுக்கும்
தூணாகி
அகம்புறம் என இரண்டுக்கும் தூணாகி
கலைகள் யாவற்றுக்கும் தூணாகி
மூவேந்தர்களுக்குத்
தூணாகி
இலக்கண இலக்கியத்திற்கும்
தூணாகி
நானிலத்திற்கும்
தூணாகி
உலகின் சிறப்புகள் அத்தனைக்கும்
தூணாகி
என்றிவள் பிறந்தனள் என்றுணராத இயல்பினளாய் இதோ இன்றும் இளமைக்குத் தூணாகித் திகழ்கின்ற
*கன்னித்தமிழே*
நீ இன்றேல்
நான் தூண்சாய்ந்த கோபுரமே!
நீதானே என்றும்
என்னைத் தாங்கும் தூண்!
*த.ஹேமாவதி
*கோளூர்