Header Ads Widget

Responsive Advertisement

இந்த நிமிடம் மட்டுமே இனிய நிஜமாக மாறட்டுமே!!!


வற்றாத நினைவுகளின்
வடிகால்கள் இது மட்டுமே!!!
நீ யாரென நானும் நான்யாரென நீயும்
தெரியாத காலங்களில்
வாழ்வின் ஒப்பந்தத்தில்
இணந்தோம்....!!!
உனக்கு உதவுவதாய் நான்
உபத்திரப்படுத்திய
நேரத்தில் தாயாய் மாறினாய்
குழந்தை பேற்றின் துன்பம்
பயமாய் எனை பற்றியபோது
பயமகற்றும் தந்தையானாய்!!
மகள்களவள் வளர்ந்து
மணமுடித்து செல்கையில்
மனமுடைந்து நின்றவனை
தோழனாய்அணைத்து தோள்தாங்கினாய்!!!
நாடு கடந்து மகன்                 பீடுநடையோடு போகையில்
பெருமையோடு அனுப்புகை
                                   யில்...
பெருமகளாய்.!
ஏவிய பணி செய்ய.    என்றுமே களைத்ததில்லை...
இழப்புகள் புதைகுழியாய்
இழுத்த நேரம் வெளியிழுத்த
மூன்றாம் கையாய்!!!
ஓய்வுபெற்ற போதும்....
ஓய்ந்து போகாதென்னை
வழிநடத்திய கைகாட்டிய
வாழ்க்கைத்துணையாய்...
எத்தனை வேடம்உனக்கு??
அத்தனையும் அரிதாரம் பூசப்படாத அசல்   அவதாரங்களாய்....
குளிர் தரும் கதிரவனாய்
மாறி அணைக்கும் இந்த
நிமிடம் மட்டுமே நிதர்சன
நிஜமாகட்டும்!!!

🌹🌹வத்சலா🌹