மதம் என்ற கம்பி நட்டு
இனம் என்ற ஜல்லி போட்டு
மாநிலமாம் மணல் சேர்த்து
மொழி என்ற சிமென்ட் கலந்தார்.
சாதி என்ற நீர் ஊற்றி
ஒற்றுமையாம் தூண் செய்து
இந்தியா என்ற கட்டிடத்தை
உறுதியுடன் கட்டமைத்தார்
மனிதம் என்ற பொறியாளர்.
பல பொருட்கள் சேர்ந்ததன்றோ
பலதுண்டாய் உடைத்திடலாம்
கனவுகண்டார் பலர் இங்கே
களைத்து விட்டார் முயற்சிதனில்.
வேற்றுமையில் ஒற்றுமையே
தாங்கி நிற்கும் தூண் என்ற
ஆற்றல் என்று கண்டவர்கள்
தலைதெறிக்க ஓடிவிட்டார்.
கறையான்கள் பல அங்கே
பல இடத்தில் நுழைந்தாலும்
ஒற்றுமையாம் தூண்மட்டும்
சற்றுகூட அசையவில்லை.
வெற்றுப் பேச்சு எதனாலும்
இற்றுப் போக்க முடியவில்லை,
அசைக்கக்கூட முடியவில்லை
தூண் அளிக்கும் உறுதியினை.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*