அவளுக்கு நான்கு படைகள்!
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பென!
மூன்றாம் படையாம் நாணம் எழுகையில்
இமைகளும் கைவிரல்களும் பாதத்தின் பெருவிரலும் அப்படையின் வீரர்களாய்த் துணைபுரியும்!
தலைவனின் நேர்முகப் பார்வையைச் சமாளிக்க நாணப்படையைத் தயார்படுத்த
இமைவீரர்கள் அவள்விழிகளை மூட
கைவிரலாம் வீரர்கள் தாமரை முகத்தை மறைக்க
பாதப் பெருவிரலோ
நிலத்தினிலே கோலம் வரையும்!
அவ்வீரர்கள் துணைபுரிந்தாலும்
இறுதியில் தோற்பார்கள்!அந்த தோல்வியே அவளுக்கு வெற்றியாக அமையும்!
*த.ஹேமாவதி*
*கோளூர்*