விழிமுனையால்
இருவரும் கட்டிய காதல்கோட்டையை
சாதியைக் காரணங்காட்டிச்
சிதைத்தப் பெற்றோர்கள் வெவ்வேறு வரன்பார்த்து செய்துவைத்தார்கள்
திருமணத்தை.
ஆனால் இருவரின் மனங்களிலும் அவர்கள் கட்டி
பெற்றோரால் சிதைக்கப்பட்ட காதல்கோட்டை இன்னமும் புராதனச் சின்னமாய்
அருங்காட்சி நினைவகமாய் உள்ளதை யாரறிவார்கள்!
த.ஹேமாவதி
கோளூர்