Header Ads Widget

Responsive Advertisement

எவருக்கு நன்றி கூற ஆசை?

எவருக்கு நன்றி கூற ஆசை?
காலணி அணிந்து
உன்னை மிதித்தவர்க்கு
நன்றி கூறு..

வெறுங்காலால் கூட
அடுத்தவரை மிதிக்கக்கூடாது என்று
எண்ணவைத்ததற்கு!

அப்பறம் உன் இஷ்டம்
என்று விலகிச் செல்பவர்க்கு நன்றி கூறு.

இதுவரை அவர்கள் விருப்பம் போல் நடந்து கொண்டபாதையை
மாற்றிக் கொள்வதற்கு
வழிவிட்டமைக்காக...

இக்கட்டான சமயத்திலும்
பதிலுக்குப் பதில்
என்று பேசும் நபர்க்கு
நன்றிகூறுங்கள்....
அவர்களுக்கு கடன்படா நிலையை உருவாக்கி
தந்ததற்கு..
உன்னை விட சிறியவர்
முன்னிலையில்
அவமானப்படுத்துபவர்களுக்கு நன்றி கூறுங்கள்...
தீர்வை நாளில் கூட
திடமுடன் நிற்கும்
நெஞ்சுரத்தை
ஏற்படுத்தித் தந்ததற்கு....
தூக்கிய கையே
பிறர் பொருட்டு
கீழே இறக்கிக்கூட
விடாமல் தூக்கிப் போட்டால்
அவர்களுக்கு ஆழமான நன்றியைத் கூறுங்கள்...
ஏனெனில்
அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும்
எழுந்து நிற்பதற்கும்
நடப்பதற்கும் வலிமையை வழங்கியதற்காக....
பத்திரிகை மட்டும் நீட்டி விட்டு அழைக்காமல் சென்றவர்களுக்கு
நன்றி கூறுங்கள்.....
சமுதாயப்பண்பிற்கு
மதிப்பளிக்கும் பக்குவம்
இன்னும் சிதையடையாமல் விட்டதற்கு..

பிறர் பொருட்டு பேசாது
வஞ்சிப்பவர்க்கு
நன்றி கூறுங்கள்.....
நீங்கள் அப்படி இருக்கக்கூடாது
என்று உங்களுக்கு
உணர்த்தியதற்கு....
உனக்காக சொல்
வாங்கி கொள்ளும்
நபர்க்கு நன்றி கூறாதீர்கள்
முடிந்தால் அவர்க்காக
சிலுவை சுமக்க நேரிட்டால்.....
தயங்காது சுமக்கதயாராகுங்கள்....
முன் கை நீட்டி
இனிப்பு வழங்கிடும்
நபர்களிடம்
மிகுந்த எச்சரிக்கையாக
இருங்கள்....
நாளையே அவர்
எட்டிஉதைக்கவும் கூடும்...
பலர் அறியநாகரிகம்
கற்று தருபவர்கள் தான்
தனிமையில்
ஆடு நனையுதேன்னு
ஆறுதல் அளிப்பர்.....


தங்கம்கம்சலவள்ளி