கானகமே வீடாக
குழந்தைகளே உலகமாய்
தினம் தினம் பயமே
வாழ்க்கையென்று
பல உயிர்கள் சிறிதென்றும் பெரிதென்றும்
வாழ்கின்றன
ஒவ்வொன்றிற்கும் பலவாறாய் சக்தி கொடுத்தவன்
சிலவற்றை பலகீனப்படுத்தி விட்டான்
சிலவற்றின் உயிரினமே
மாக்களிலும் மக்களாலும் அழிக்கப்பட்டு விட்டன
மனிதன் காட்டை எட்டா வரையில் செழித்திருந்தது
எட்டும் போது அழிந்திருக்கிறது
மனிதன்
காட்டை கூறு போடாமல் குறுக்கிடாமல்
இருந்தாலே
தாவரங்களும் உயிரினங்களும் செழித்திருக்கும்
காடு செழித்தால்
நாடு செழிக்கும்
நாடு செழித்தால்
மக்களின் வாழ்வு செழிக்கும்
இறைவன்
சிலவற்றை அழகாய் படைத்தும்
ருசியாய் படைத்தும் விட்டான்
சில அழகுக்காக அடிக்கப்படுகின்றன
பல ருசிக்காக துரத்தப் படுகின்றன
துரத்தப் படுவதும்
விரட்டப்படுவதும்
எதற்காக இருந்தாலும்
பெண்ணினமும்
மானினமும் ஒன்று
தன்னை காத்துக் கொள்ள எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது
மரங்களை வைப்போம்
மழையைப் பெருக்குவோம்
காடுகளை வளர்ப்போம்
அங்குள்ள உயிர்களை பாதுகாப்போம்
தி.பத்மாசினி