பொன்னும் பொருளும் அருளாலே,,, வறுமையும் திறமையும் விதியாலே,,,
நட்பும், உறவும்
செயலாலே,,,
நினைப்பும் மறப்பும் மனத்தாலே,,,,
குறைகள் இல்லா மனமில்லை,கொடுத்தும் பார்த்து நிறைவில்லை,,,
நன்மையில் தீமையும் விளைந்திடவே,,, அறிந்திட வேண்டும் அறிவாலே,,,,
உண்மையில் பொய்யில் கலந்திடவே பிரித்திடல் வேண்டும் தனியாக,,,
நன்மையில்லாப் பொருட்களைப் போல்,
தீமையை தள்ளி வைத்திடத்தான்,,,,
ஆன்றோர் போக்கை நாமறிந்து,
மார்கழி
இறுதியில்
கழித்து விட்டோம்,,,
போகிற போக்கில் போக்கெல்லாம் காலப்போக்கில்
மாறிடவே,,,
தேவையில்லா செயலும், பொருளும்
எரிக்க,
தேவையாகி "போகி"றதே,,,,!
பாலா