அன்பால் இணைந்த உறவுகளே
உணர்வால் இணையப் புறப்படுங்கள்.
சுயமரியாதை சூடுதணியாமல்
சூளுரையோடு புறப்படுங்கள்.
ஏமாற நாங்கள் தயாராக இல்லை
என்பதை உணர்த்திப் புறப்படுங்கள்.
உரிமையைக் காப்பதே உன்னதம் என்ற உணர்வோடு நீங்கள் புறப்படுங்கள்.
தன்மானம் காப்பதே தலையாய நோக்கம்
என்ற முழக்கத்தோடே புறப்படுங்கள்.
போராடித்தான் பெறவேண்டுமென்றால்
போராடத் தயாரென்று புறப்படுங்கள்.
அடிமைகள் அல்ல ஆசிரியர்கள் என்று அடலேறுகளாகப் புறப்படுங்கள்.
உரிமைக்காகக் குரல் கொடுக்க,
உணர்வைக் காக்கும் முடிவெடுக்க,
தூற்றுவார் தம்மை வேரறுக்க,
வரும் தலைமுறை நிமிர்ந்து நிற்க,
ஒற்றுமை தனையே உணரவைக்க,
கற்றவர் நாம் என்று புரியவைக்க,
நாளை நமதே என்றுணர்த்த
புறப்படுங்கள் நீங்கள் புறப்படுங்கள்
புதியவிடியலாய்ப் புறப்படுங்கள்.
சுலீ அனில் குமார்