Header Ads Widget

Responsive Advertisement

மொத்தமாய் ஒரு முத்தம் - த.ஹேமாவதி


பேறுகால விடுப்பு முடிந்து
பணிக்குத் திரும்பும்
தாயானவள்
தனது குழந்தைக்கு
பாசத்துடன்
மொத்தமாய் ஒரு முத்தம்
தந்துவிட்டுச் செல்லுவாள்!
இல்லந் திரும்பும்வரை
பிரிவை ஆற்றுவதற்கு!

விடுப்புக் காலம் முடியுமுன்னே
வந்துவிட்ட ஆணையாலே
இராணுவம் புறப்படும் வீரன்
தேம்பி அழுகின்ற தன்னிளம் மனைவியை ஆறுதலாய்க் கட்டித்தழுவி காதலுடன் தருவான் அவளுக்கு மொத்தமாய் ஒரு முத்தம்
மீண்டும் அவன் விடுப்பில் இல்லம் வரும்வரை அந்த முத்தத்தின் தித்திப்பு இருவரின் இதழ்களிலும் இதயங்களிலும் தீர்ந்துப் போகாத அளவு அவ்வளவு அழுத்தமாய்!

புதுமணத் தம்பதியர் ஆடிமாதம் வருகையிலே தாய்வீடு செல்லுகின்ற புதுமணப்பெண்ணுக்கு
புதுமாப்பிள்ளை ஒருமாதப் பிரிவைத் தாங்க இயலாமல் அதை ஈடுகட்ட மொத்தமாய் ஒருமுத்தம் தருவான்! அதுவோ நீண்டமுத்தமாய் ஆகிவிடும்!

விமானநிலையங்களிலும்
கடற்கரைத் துறைமுகங்களிலும்
அன்றாடம் பார்க்கலாம் இப்படியான முத்தங்களை!
பெற்றோரைப் பிரிந்து பணம்ஈட்ட
அயல்நாடு செல்லும் மகனுக்கு
தாயும்தந்தையும் மாறிமாறி தருவார்கள்  மொத்தமாய் ஒருமுத்தம்!மீண்டும் தங்கள்மகன் எப்போது வருவானோ?அவன்முகம் காண்பதெந்நாளோ?
என்ற ஆதங்கத்தின்
வடிகாலே அந்த முத்தம்!

அடிக்கொருதரம் தரப்படும் முத்தங்களைவிட
மொத்தமாய் இடும் ஒரு முத்தத்தின் வலிமை அதிகம்!
அதில் வெளிப்படும் அன்பும் அதிகம்!

மீண்டும் காண நீண்டநாள் ஆகும்
என்ற சமயங்களில்
அன்புடைய நெஞ்சங்கள் ஒன்றிலொன்றாய்
பாலில் சர்க்கரையாய்க் கரைந்துக் கலந்து
ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்வார்கள்
மொத்தமாய் ஒரு முத்தம்!

ஆழ்ந்த சோகத்துடன்
மீளாஉலகுக்குச் சென்றுவிட்ட
தன் அன்புக்குரியவரின்
உயிர்நீத்த சடலத்திற்கும்
மொத்தமாய் ஒரு முத்தம் வழங்கும் காட்சியிலோ சோகமது மனதைக் கொல்லும்!

இறைவனுக்கும் நாம் மொத்தமாய் அல்ல தினந்தோறும் முத்தமிடலாம்!
பெற்றோரின் பாதங்களில் வீழ்ந்து இடும் முத்தங்கள் எல்லாமே இறைவனுக்கே இடுகின்ற முத்தங்களாகும்!

*த.ஹேமாவதி*
*கோளூர்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹