Header Ads Widget

Responsive Advertisement

தேன்

தமிழின் மேல் கொண்ட அன்பால்

       தமிழை சுவைத்தேன்


தமிழில்  உள்ள அழகி ய வார்த்தைகளை

    ரசித்தேன்


தமிழின் இளமையைக் கண்டு 

களித்தேன்


தமிழில் உள்ள இலக்கியங்களை

நேசித்தேன்


தமிழனென்றிருந்தும் தமிழ் படிக்காதவர்களைக் கண்டு திகைத்தேன்


தமிழை அந்நியர் நேசிப்பதைக் கண்டு

மெய்சிலிர்த்தேன்


தமிழ் கற்க விரும்புவோருக்கு 

தமிழை கற்பித்தேன்


தமிழின் முப்பாலையும் கண்டு மகிழ்ந்தேன்


தமிழின் சில குறட்பாக்களை மனனம் செய்தேன்


தமிழ் அறிஞர்களின் புலமையைக் கண்டு வியந்தேன்


தமிழன்னைக்கு மகுடம் சூட்ட நினைத்தேன்


முடியாததால்


தமிழுக்கு என்னையே ஈந்தேன்


கன்னித்தமிழை

முத்தமிழை

தேனிலுமினிய தமிழை

கற்காத தமிழன் 

அன்னையிருந்தும் அனாதையே


வாழ்க தமிழ்


தி.பத்மாசினி