ஒன்றே ஒன்று இறைவன்
இரண்டு இல்லாமல் நம் பிறப்பில்லை
தாய் தந்தை
மூன்று இருந்தால் நம் வாழ்வு துயரமாகும்
செருக்கு பெருமை கோபம்
நான்கு இருந்தால் நம் வாழ்வு வளமாகும்
உண்மை உழைப்பு நேர்மை முயற்சி
ஐந்து இருப்பதால் தான் நாம் வாழ முடிகிறது
ஐம்பூதங்கள்
ஆறு அறிவு இருப்பதால் தான்
சிந்தித்து செயல்படுகிறோம்
ஏழு உலக அதிசயங்களை விட
சிறந்தவள் நம் தாய்
எட்டு அடுக்கு மாளிகையிலிருந்தாலும்
தாழ்மையை மறவாதே
ஒன்பது கோள்கள் சுற்றி வந்து நம் வாழ்வை கணிக்கின்றன
பத்து பேருக்கு நல்லது செய்தால்
நமக்கு புண்ணியம் உண்டாகும்
தி.பத்மாசினி