Header Ads Widget

Responsive Advertisement

மரண ஊர்வலங்கள்

நாளெல்லாம்
கடந்து போகும்
மரண ஊர்வலங்கள்
பூக்கள்
வெடிகள்

ஆட்டம்
பாட்டம்

நடையாகவோ
வாகனத்திலோ
தொடரும்
உறவுகள்

எரிப்பது
புதைப்பது
எதுவானாலும்

தன்னுணர்தலின்
பயத்தினிடையே
விரையும் கால்கள்
நுழையும்
டாஸ்மாக்கில்

பொன்.இரவீந்திரன்