வினா ஒன்று கேட்கட்டுமா பாப்பா?நீ விடையெனக்குப் பகர்வாயா பாப்பா?
என்றும் மறையாத
கதிரவன் யாரெனச்
சொல்வாயா பாப்பா?
நானே சொல்கிறேன்!அக்கதிரவன் தான்
நமதருமை அம்பேத்கார் பாப்பா!
சாதிவெறிச் சேற்றினிலே செந்தாமரையாய் மலர்ந்தார் பாப்பா!
வறுமை தாலாட்ட
தீண்டாமை கழுத்தை நெறிக்க
வகுப்பறையிலேயே
தனிமைப் படுத்தப்பட
தீயின்நாவிலே அஞ்சாத அரிமாவாய் எழுந்தார்!விளிம்புநிலை மக்களை உயர்த்திட
தன்னறிவு முழுவதையும் தாரைவார்த்தார்!
சட்டத்தைத் திருத்தி தொகுத்தார்!
யாவருக்கும் அடிப்படை உரிமைகள் ஒன்றே எனமுழங்கினார்!
சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக்கினார்!
தன்னை நம்புபவன்
அவனோடு சேர்த்து
பிறரையும் உயர்த்துகிறான்!என்பது அவரது பொன்மொழி!
விளிம்பில் தள்ளப்பட்டவர்கள்
இருளில் இருந்து ஒளியுலகு வருவதற்கு கல்வியே வழியாகும்!பெண்ணடிமை ஒழிவதற்கும் தீண்டாமைப்பேய் மடிவதற்கும் கல்வியே துணையாகும்!என்றே போதித்தார்!
அம்பேத்கார் என்ற மாமனிதர் பிறந்திராவிட்டால்
தீண்டாமைப் பேயும்
பெண்ணடிமை அரக்கனும்
மூடத்தனப் பிசாசுகளும் மாயைகளும் மந்திரங்களும் இன்று நம்மை ஆண்டுக் கொண்டிருக்கும்!
நாம் அழிந்துக் கொண்டிருப்போம்!
நம்மை வாழ்விக்க வந்த மகான்
நாட்டை முன்னேற்ற வந்தமகான்
அண்ணல் அம்பேத்காரை
எந்நாளும் வணங்கிப் போற்றுவோம்!
த.ஹேமாவதி
கோளூர்