Header Ads Widget

Responsive Advertisement

தூக்கம்

நீ இரவா ?பகலா?

தெரியவில்லையெனக்கு

நீ நிலவா ?கதிரா?

புரியவில்லை கணக்கு...

நீ புதிரா ?விடையா?

அறிந்ததில்லை இதுவரை

உன் மௌனம் கூட

ஆயுதமாய் எனை

தாக்குமென்பதை

நினைத்ததில்லை ்்இதுவரை உனதுவழியோரப்பார்வைக்கு

விடைக்கிடைத்ததில்லை்்

எடுத்துப்பார்த்த அகராதிகளில்்்்்

கவிபாட கம்பனை

அழைத்தேன் வரவில்லை்்்

காற்றுக்கு அனுப்பிய

தூதும்வந்து சேரவில்லை்்்்

கரிசல்காட்டுப் பூக்களுக்கும்

கருணையில்லை்்்கனவுப்

பெண்ணென உன்னைப்

படைத்திட்ட பிரம்மனுக்கும்

பிழைத்திருத்தம் செய்ய

நினைப்பில்லை்்்்

அரும்பாகி மலராகும்

இயற்கையின் நியதிகளில்

உனக்குமட்டும்

விதிவிலக்கு அமுலுக்கு

வந்தது போல இறுமாந்த

பார்வையில் என்னை

நித்தமும் கொன்று

உயிர்ப்பையும் தருகிறாய்்்்


🌹வத்சலா🌹