எல்லையிலே எல்லையற்ற துன்பத்தை அனுபவித்து, தொல்லைதரும் அயலானை தொலைதூரம் துரத்திவிட்டு,
பிள்ளைகளைக்கூடப் பார்க்காமல் கொஞ்சாமல்,
தேசத்தைக் காத்து நிற்கும் தியாகியாம் வீரனே
உனக்கு எங்கள் வீரவணக்கம்.
எம்மக்கள் நிம்மதியாய் வீட்டினிலே தூங்குதற்கு,
தூங்காமல் விழித்திருந்து எம் தேசம் காத்து நிற்கும்,
இரத்தத்தை உறையவைக்கும் பனிமலையில் எழுந்து நின்று,
எம் தேசப் பாதுகாப்பை உறுதி செய்யும் வீரர்களே.....
உமக்கு எங்கள் வீரவணக்கம்.
தாய்முகத்தைப் பாராமல், தாரத்தை அணைக்காமல்,
தாய்நாட்டைக் காக்கின்ற தியாகத்தின் மறுபெயரே,
உயிருக்கு உயிரான உறவை நட்பை விட்டுவிட்டு
தூரத்தில் நின்று கொண்டு துயரத்தில் பங்கு கொள்ளும்,
பாரதத்தாய் ஈன்றெடுத்த பார்போற்றும் வீரர்களே....
உமக்கு எங்கள் வீரவணக்கம்,
வீர வணக்கம்.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*