மொழியில்லா கவிதை நீ!
விழிகள் விரும்பும்
ஓவியம் நீ!
பால்மணங் கமழும்
பூவன்றோ நீ!
தாலாட்டுப் பாட்டின்
வேரன்றோ நீ!
நித்தமும் புத்தம்புது
மலராய் இருந்து
மொத்தமாய் அள்ளி
முத்தமிடவைக்கிறாய்!
உன்னைக்கண்டால்
கோடிஇன்பம்!
உன்முகமே கவலை
போக்கும் சாதனம்!
*த.ஹேமாவதி*
*கோளூர்*