என்தாயை அணைக்கையிலே
அன்பை உணர்ந்தேன்!
என்தந்தையை
அணைக்கையிலே
பாதுகாப்பை உணர்ந்தேன்!
உடன்பிறந்தோரை அணைக்கையிலே பாசத்தை உணர்ந்தேன்!
நட்பையும் சுற்றத்தையும் அணைக்கையிலே மகழ்ச்சியை உணர்ந்தேன்! கட்டிய கணவனை
அணைக்கையிலே
காதலை உணர்ந்தேன்!
ஆனால்
இவை மொத்தமாய்
நான்பெற்ற செல்வமே உன்னை
அணைக்கையிலே நான் உணர்ந்தேன்!அன்னையாய் என்னை ஆக்கிய என்கண்ணே மலர்களைச் சேர்த்து அணைத்ததைப் போல் உன்னை என்னோடு அணைத்துக் கொண்டேன்!இதைவிடப் பெரும்பேறு ஏதுண்டு?பிறவிப்பயன் அடைந்துவிட்டேன் உன்னை என்னோடு அணைத்து!
த.ஹேமாவதி
கோளூர்