Header Ads Widget

Responsive Advertisement

நில் கவனி செல்



சின்னஞ்சிறு
வாழ்கையிது.
தாயில்  துவங்கி
தீயில்  முடிகிறது.....

முடியவில்லை
மனிதர்களிடம்
கோபங்களும்
துரோகங்களும்.....

மன்னிக்க தெரியாத
விடாப்பிடிகளிடம்
மண்டியிட்டே
மாண்டு போகிறது.
அஹிம்சை.....

பேச்சில் மட்டும்
காந்தியை பிறசவிக்கும்
சிலரால் தான்
தினம் தினம்
செத்துக் கொண்டிருக்கிறது.
அமைதி.....

வீண் தத்துவம் பேசி
உலகாளத் துடிக்கும்
வீணர்க்கூட்டத்திடமே
விடை
தேடிக்கொண்டிருக்கின்றோம்.....

நீதி தேவதைக்கு
கருப்பு துணிக்கட்டி
நீதி கேட்கும்
கூட்டத்திடம்.
நாம்
இருளை மட்டுமே
தீர்வாக
பெற முடியும்.....

மனமே விழி
இங்கே
உள்ள மனிதரெல்லாம்
ஒற்றுமை பேசும்
தீவுக் கூட்டங்கள்.
சற்றும் இரக்கமில்லா
காவுக் கூட்டங்கள்.....

நில்.....
    கவனி.....
          செல்.....

கவிஞர் ராஜா ஆ
பண்ருட்டி 607 106

செல்:  9042507317