பேச அவள் முற்படும்போதெல்லாம்
தமிழ்எழுத்துகளெல்லாம்
தங்களுக்குள்
ஒன்றையொன்று
முண்டியடித்துக் கொண்டு
அவள் செந்நாவில்
சொல்லாக அரங்கேற அவள் பயன்படுத்தும் எழுத்துகளுள் தாமும் இடம்பெற மாட்டோமா?என
ஏங்கித் தவிக்கும்!ஏனெனில் அப்போதுதானே
அவை தித்திக்க தித்திக்க தேனில் குளிக்கும்!
த.ஹேமாவதி
கோளூர்