அளவுக்கு விஞ்சினால்
அமுதமும்
நஞ்சாகும்!
இது உண்மைதான்!
ஆனால்
அளவுக்கு விஞ்சினால்
நஞ்சும்
அமுதாகுமா?
ஆகாதுதானே
ஆனால் ஆகிறதே
கண்ணே நீ
என்னை நோக்கி
நஞ்சான வார்த்தைகளை
அளவுக்கும் விஞ்சி
பேசினாலும்
எனக்கோ அவை
அமுதாக இனிக்கிறதே!
இதுவும் உண்மை!
உண்மையன்றி பொய்யில்லை கண்ணே!
த.ஹே
கோளூர்