பயணச் சீட்டு இல்லாமலேயே
ஊருராய் பயணம் செய்யும்
நம்மையும் அழைத்துச் செல்லும்
இன்பத்தில் திளைக்கச் செய்யும்
பந்த பாசம் கிடைக்காதவர்க்கும்
பரிவு காட்டச் சொல்லும்
பாதை ஓரம் இருப்பவர்க்கும்
பாதுகாப்பு அளிக்கச் சொல்லும்
சொந்தமாகவே இருந்தாலும் தீங்கிழைத்தால்
தள்ளி நிற்கச் சொல்லும்
பலரை உயர்த்தியும் பேசும்
சிலரை தாழ்த்தியும் பேசும்
அநேரை ஆற்றியும் தேற்றும்
பலருக்கு இளகியதாக இருக்கும்
சிலருக்கு இறுகியதாக இருக்கும்
அநேகருக்கு மனமே இருக்காது
நம்மை ஆட்டி வைக்கும்
அற்புதமான மகா சக்தி
பம்பரமாய் சுழல வைக்கும்
நம் உணர்வோடு கலந்திருக்கும்
மமனமிருந்தால் மார்க்கம் உண்டு
மனமுவந்து அனைவரையும் அரவணைப்போம்
பொருள் உள்ளோர் இல்லார்
அனைவரையும் சமமாக நினைப்போம்
தி.பத்மாசினி