உன் பார்வையின் உரசலிலே சிறகுமுளைத்துப் பறக்கிறேன்!
உன் மெல்லிய புன்னகையில்
என்இருட்டுகள் ஓடிட புதியவிடியல் காண்கிறேன்!
உன் விரல்கள்
என்விரல்களைப் பற்றுகையில்
உலகையே வென்றுவிட்டதாக உணர்கிறேன்!
என்பெயரை
நீ உச்சரிக்கும் போதெல்லாம்
புதிதாகப் பிறப்பதுபோல் ஆகிறேன்!
உன்மடியில் தலைசாய்கையில்
ஆறுதலாய் என்னை நீ வருடுகையில்
அப்படியே கண்மூடி
இறந்துவிட நினைக்கிறேன்!
ஓ...........இதுதான் காதலா?
த.ஹேமாவதி
கோளூர்