ஏகாந்தமாய்ப்
பூத்தமலரே!
காந்தமாய்க்
கவரும் மலரே!
உலகின்
அழகான ஓவியம்நீ!
எழுதாத காவியம்நீ!
எண்ணத்தைக் களிப்பூட்டும் எழில்வண்ணம்நீ!
கண்களை நிலையாக நிறுத்திவைக்கும் மந்திரமும்நீ!
கல்மனதையும் இளகவைக்கும் தந்திரமும்நீ!
உன்னைவிடச் சிறந்தப்பொருள் உலகில் உண்டென்றால் உண்டு..............
அதுவும் நீயேதான்!
ஆம் உனக்குநிகர் நீயேதான்!
த.ஹேமாவதி
கோளூர்