Header Ads Widget

Responsive Advertisement

மீண்டும் ஒரு சுதந்திரப்போர்

மீண்டும்ஒர்சுதந்திரப்போர்
:::::::::::::::::::::::::;::::::::::::::
உயிர் தந்தவனே இன்று
உடல் தின்கினான்...தாயின்
கருப்பையில் ஒளிந்து
கொள்ள முடியுமா??
தாயானவளே
தாழ்திறந்துவிடுகிறாள்...!
தரைக்குள் புதைந்து
கொள்ளமுடியுமா???
உறவுக்காரனென வருகிறா
எச்சிலிலையாக்க
எங்கேபோய் ஒளிந்து
கொள்ளமுடியும்????
ஆசையாய் பயிலச்சென்றால்
“ஆசு”களைபவர் சிலர்
ஆபாசமாய்நடத்துகிறார்
ஆகாயத்தில் ஒளிந்து
கொள்ளமுடியுமா?????
பதின்வயதுக் கோளாரால்
பாதைமாறும் நேரம்
பக்குவமாய் பசியாறுவார்
பறந்துதான் செல்லத்தான்
முடியுமா??????
காவலுக்குப்போனாலும்
காவலராலேயே
களவாடப்படுகிறார்கள்
காற்றில்கரைந்துவிட
முடியுமா???????
கல்லூரியிலோ.......
மதிப்பெண்பயங்காட்டி
மானம் பறிக்கிறார்
மறைந்து போய்விடத்தான்
முடியுமா????????
விடுதியிலோ எழுதாதவிதியாம்!
வேண்டும்போதெல்லாம் விருந்தாக வேண்டுமாம்......
வேரடிமண்ணாக முடியுமா??
அலங்கார அங்காடிகளில்
அதிக சமயம்விலைபோவது
பொருட்கள்மட்டுமில்லை
அழிந்துபோய்விடத்தான்
முடியுமா??????
ஊர்விட்டு வந்து
பணிசெய்யும் பாவையர்
விடுதியில் தங்கிட்டால்
படம்பிடிபான் கொண்டு
பாருக்கே வருகை
பங்குபோட்டுதருகின்றார்
பலியாகத்தான் முடியுமா???
பெண்ணாலே பிறந்து
பெண்ணுடன் வளர்ந்து
பெண்ணை மணந்து
பெண்ணைப்பெற்றும் சில
பேயர்தம் மனதில்
பெண்ணென்பவள் வெறும்
பிண்டமே சதைப்பிண்டமே!!
பெண்நிழலையும்மோகிக்
                                   கும்
பித்தர்வாழும் உலகை
எத்தித்தள்ளி வாழ
எழுந்து நில் பெண்ணிமே!!!
   
பெண்ணைத்தெய்வமெனக்
                           கூறும்
உண்மையானபொய்யை
வன்மையாளரை எதிர்க்க
                                உனது
மென்மை எதிர்த்து போராடு
திருப்பி நீ அடித்தால் தாங்
                                 காது
திருடர் கூட்டம்
திறமையுண்டு போராட
வென்றெடுப்போம்
வீரச்சுதந்திரம் மறுபடியும்
பெண்ணின் தனித்தன்மை
என்றும் நிரந்தரம்
வந்தேமாதரம்

🌹வத்சலா🌹