பெற்றோர் இல்லையென்றால் எந்த உயிரும் ஜனிப்பதில்லை
நம்மை கருவில் சுமந்தவளை
நாம் தெருவில் நிறுத்தலாமா?
நாம் அழுதால் அழுது
நாம் சிரித்தால் சிரித்து
நாம் எவ்வளவு கஷ்டப்படுத்தினாலும்
நம்மை வெறுக்காத ஒரே ஜீவன் அன்னை
அன்னையின் ஒருப்பிடி அன்னமின்றி
கலப்படமில்லா பாசமின்றி
நாம் தானாக வளர்வது எப்படி
உலகில் சொந்த பந்தமற்றவர்களே மிகப்பெரிய ஏழை
அந்த வகையில் நம்மை பணக்காரராக்கி வைத்திருக்கிறார் நம் தந்தை
நம்மை கொஞ்சி கொஞ்சி
அன்பும் பண்பும் ஊட்டி
பாசமும் நேசமும் காட்டி
படிப்பும் பட்டமும் வாங்கித் தந்து
நம்மை உயர்த்திய பெற்றோரை
ஒருபிடி அன்னத்துக்காகவும் பாசத்துக்காகவும் கெஞ்ச வைக்கலாமா
வாழ்க்கையென்னும் வண்டியில்
பெற்றோர்கள் இரு சக்கரமாயிருந்து
உன்னை உயர்த்தியிருக்கிறார்கள்
ஒரு சக்கரம் பழுதடைந்தாலும்
உன் வண்டி குடை சாய்ந்திருக்கும்
உன்னை இம்மட்டுமாய் வளர்த்த
மாதாவை மதிக்காதவனும்
பிதாவின் வார்த்தையை பின்பற்றாதவனும்
பெற்றொரை பேணி பாதுகாக்காதனும்
பின்னொரு நாளில்
இதே நிலைக்கு ஆளாவான் தன் பிள்ளையிடம்
தி.பத்மாசினி