Header Ads Widget

Responsive Advertisement

காதலர்கள்

அவர்கள் திருடர்கள் அல்ல ஆனாலும்

பயந்து மறைந்து செல்கின்றனர்


அவர்கள் கொள்ளையர்கள் அல்ல ஆனாலும்

ஒருவர் மனதை ஒருவர் கொள்ளையடிக்கின்றனர்


அவர்கள் ஊமைகள் அல்ல ஆனால்

கண்ளால் பேசிக் கொள்கின்றனர்


அவர்கள் குருடர்கள் அல்ல ஆனால்

பக்கத்திலிருப்பவர்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை


அவர்கள் ஒரே ஊரிலிருப்பவர்கள் ஆனால்

தூரத்திலிருப்பதைப்போல் துடித்துப் போகிறார்கள்


அவர்கள் நோயாளிகள் அல்ல ஆனாலும்

இருவரும் சோர்வுற்று இளைக்கிறார்கள்


ஈருடல் ஓருயிர் என்கிறார்கள் ஆனால்

அடிக்கடி சண்டையிட்டுக் கொள்கிறார்கள்


என்ன காதலோ இந்த புதிரான 

காதலின் ரகசியம் புரியவில்லை


தி.பத்மாசினி