அறிவியலில்
புரியாத
உருகுதலும்
கொதித்தலும்
உறைதலும்
பதங்கமாதலும்
படிகமாதலும்
இன்று உன்னால்
நன்கு புரிந்துக்கொண்டேனடி!
நீ பார்க்கமாட்டாயா?என்று எனக்குள் உருகிக்கொண்டிருக்கையில்
நீ பார்க்கும் கணநேரத்தில் குளிர்ந்து உறைந்துப் போகிறேன்!நீ என்னைப் பாராமல்
போகும்போது
குழம்பிக் கொதித்துப் போகிறேன்!ஒரேஒருமுறை என்னிடம் பேசமாட்டாயா?என ஏங்கிக் கிடக்கிறேன்!
பேசும்வரைக் காத்திருக்கிறேன்!
இல்லாவிட்டால் பதங்கமாகிக் காற்றில் கரைந்துக் காணாமல் போய்விடுவேன்!
ஒருவேளை நீ பேசிவிட்டால் அப்படியே குளிர்ந்து
படிகமாய்க் காதலுக்கு உருவம் கிடைத்ததென்று அகமகிழ்ந்துப் போவேன்!
த.ஹேமாவதி
கோளூர்